‘தேசிய அரசியல்’ பகுப்புக்கான தொகுப்பு
மகாத்மாவின் ஆரசியல்
சாதி மதத்தோடு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதது. சாதி ஒரு நடைமுறை வழக்கமே. சாதியின் மூலம் எதுவென்று எனக்குத் தெரியாது.
என் ஆன்மீக வேட்கையைத் தணித்துக்கொள்ள சாதியின் மூலத்தை நான் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் சாதி ஆன்மிக வளர்ச்சிக்கும், தேச வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்க கூடியது என்பது எனக்குத் தெரியும். வர்ணம், ஆசிரமம் ஆகிய நிறுவனங்கள் சாதிகளோடு சிறிதும் தொடர்பு இல்லாதவை.
வருணச்சட்டம் நமக்குக் கற்பிப்பது என்ன?
பரம்பரைத் தொழிலை மேற்கொண்டு ஒவ்வொருவருவரும் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும் என்பதுதானே. வர்ணச்சட்டம் நம் உரிமைகள் என்ன என்பதைக் கூறவில்லை. கடமை என்ன என்பதையே கூறுகிறது. மனித குலத்திற்கு நன்மை செய்வதற்கான தொழில்களைப்பற்றியே அது பேசுகிறது. வேறு எதையும் அல்ல. மிகவும் உயர்ந்த தொழில் அல்லது மிகவும் தாழ்ந்த தொழில் என்று எந்த தொழிலும் இல்லை என்பதும் இதனால் விளங்கும்.
எல்லாத் தொழில்களும் நல்லவைதான். சட்டத்திற்கு உட்பட்டவைதான். ”எல்லா வகையிலும் சம அந்தஸ்து கொண்டவைதான். ஆன்மீக குருவாக இருப்பது என்னும் பிராமணனின் தொழிலும் கோட்டி ஒருவனின் தொழிலும் சமமானவையே. தத்தமக்குரிய கடமைகளைபிராமணனும் கோட்டியும் சரிவரச் செய்து ஒரு காலத்தில் கடவுளின் கண்களுக்கு சமமான சிறப்பு உடையதாகவே காட்சியளித்தது. மனிதனிடமுருந்தும் ஒரே மாதிரியான ஊதியத்தையே பெற்று வந்ததாக தெரிகிறது.பிராமணன் ஆனாலும் சரி கோட்டி ஆனாலும் சரி வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே அவர்கள் அத்தொழிலை மேற்கொண்டார்கள். வேறு எதற்காகவும் இல்லை. இன்றுங்கூட கிராமங்களில் இந்த சட்டம் சிறப்பான முறையிலே செயல்பட்டு வருகிறது என்பதற்கு சில அடையாளங்கள் காணப்படுகின்றன. 600 பேரே உள்ள சீகன் என்ற ஊரில் பிராமணர்கள் உள்ளிட்ட பலவேறு தொழிலாளிகளின் ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
சீரழிந்த இந்தக்காலத்திலும் நான் உண்மையான பிராமணர்களைப் பார்க்கிறேன். அந்தப் பிராமணர்கள் அவர்களுக்குப் பிறர் மனமுவந்து இடும்பிச்சையால் உயிர்வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய ஆன்மிக அறிவு, அனுபவம் என்கிற அரிய சொத்தை மனமுவந்து பிறருக்கு வழங்குகிறார்கள். தாங்கள் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறிக் கொண்டு அதே நேரத்தில் அந்த வர்ணத்திற்குரிய ஒரே ஒரு செயல்பாட்டு விதியையும் வெளிப்படையாக மீறி நடக்கிற மனிதர்களின் வாழ்க்கையில் காணப்படும் கேலிக்கூத்துகளை கொண்டு வர்ண சட்டத்தை ஆராய முற்படுவது பிழையானது. முற்றிலும் முறையற்றது. மற்ற எந்த வர்ணத்தை விடவும் தங்கள் வர்ணமே உயர்ந்த அந்தஸ்து கொண்ட வருணம் என்று எந்த வருணத்தாரும் உரிமை கொண்டாடுதல் கூடாது. அவ்வாறு செய்வது வர்ணச் சட்டத்தை மறுப்பதே ஆகும்.
தீண்டாமையை நம்பச் சொல்கிற எந்த அம்சமும் வருணச் சட்டத்தில் இல்லை. ( சத்தியமே கடவுள், அகிம்சையே மனித குலத்தின் சாரம் என்பது இந்து மதத்தின் சாராம்சம்)
டாக்டர் அம்பேத்கார் மட்டும் அல்ல இந்து மதம் பற்றி நான் தந்திருக்கிற இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து இன்னும் பல தலைவர்கள் எதிர்வாதம் புரிவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இவர்களின் எதிர்வாதத்தால் என் நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது. இந்த விளக்கத்தின் படிதான் கடந்த 50ஆண்டுகளாக நான் வாழ்ந்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு என் வாழ்க்கையை அந்த விளக்கத்திற்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.
-”மகாத்மா” காந்தி – ‘ஹரிஜன்’, ஜூலை 18, 1936. *
விடுதலை கோரி
போராட்டம்- ஆங்கிலேயனிடம்
தன்னைத் தக்கவைக்க
அடமானம் ஆரியனிடம்
ஹே ராம்!!! *
மறுமொழிகள் (17)