‘திருமண வாழ்த்து’ பகுப்புக்கான தொகுப்பு

மணமாலையும் மஞ்சளும் சூட…

இன்று எனது உயிர்நண்பன் M. பாலாஜி க்குத் திருமணம். கல்லூரியில் இரட்டையர்கள் என்றழைக்கப்படும் அளவிற்கு நாங்கள் நெருக்கம். ஒரே அறையில்லாவிட்டாலும் அறைநண்பன். கல்லூரி சேர்ந்த போது இவனது ஊரை அறிந்து கொண்டு நிச்சயம் இவனை நண்பனாக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்( ஏன் என்பது இப்போது அவ்வளவு முக்கியம்ற்றது. சிரித்துகொள்ள மட்டும் நினைத்துக்கொள்வேன்). ஆனால் இயல்பாகவே நண்பர்களாகிவிட்டோம். என் மனமறிந்த உற்ற நண்பன். இயல்பான இனிமையான சோம்பேறி அவன். அவன் திருமண பத்திரிக்கை கூட நான் தொலைபேசி வாங்கினேன். அதுவும் சென்ற வாரத்தில்தான் :-) .

தொலைபேசியில் அழைத்து மண்டகப்படி அர்ச்சனை செய்ய போதும்டா விடுடா என்றான். ஒழுங்கா 5 நிமிடம் திட்டு வாங்கிக் கொள் என்று சொல்ல பொறுமையாக கேட்டுக் கொண்டு திட்டி முடித்தவுடன் இரு கான்பிரன்ஸில் போடுறேன் அவங்ககிட்ட பேசு என்றான். அதான் என் பாலாஜி. இணைப்பு கிடைத்ததும் முதல் வார்த்தை சொன்னேன் உனக்கு நான் இன்றையிலிருந்து அண்ணன்மா. எதுவும் சேட்டை செய்தான் என்றால் சொல் கவனித்துக் கொள்கிறேன் என்று. சரி அண்ணா என்று சொன்னதும் அன்றைய ஒரு மணி நேர உரையாடலில் ஆத்மார்த்தமாக அண்ணா என்று அழைத்ததும் மனதில் இனிமையாக நிற்கிறது. இனிமையான நட்பு இன்று உறவாக அடுத்த நிலைக்கு நகர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கம் போல் வெளிநாட்டு சம்பாத்தியத்தினால் இன்னொரு முறை ஏமாற்றம். நேரில் காண மிகவும் விரும்பிய திருமணம். மறுபடியும் அதே ஓரிரு மாத இடைவெளியினால் இழந்திருக்கிறேன்.

இன்று மணமாலை சூடிக் கொள்ளும் பாலாஜி-மல்லிகா
தம்பதியினருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

என்னோடு நீங்களும் வாழ்த்துங்களேன்



மணமாலையும் மஞ்சளும் சூட…

இன்று எனது உயிர்நண்பன் M. பாலாஜி க்குத் திருமணம். கல்லூரியில் இரட்டையர்கள் என்றழைக்கப்படும் அளவிற்கு நாங்கள் நெருக்கம். ஒரே அறையில்லாவிட்டாலும் அறைநண்பன். கல்லூரி சேர்ந்த போது இவனது ஊரை அறிந்து கொண்டு நிச்சயம் இவனை நண்பனாக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்( ஏன் என்பது இப்போது அவ்வளவு முக்கியம்ற்றது. சிரித்துகொள்ள மட்டும் நினைத்துக்கொள்வேன்). ஆனால் இயல்பாகவே நண்பர்களாகிவிட்டோம். என் மனமறிந்த உற்ற நண்பன். இயல்பான இனிமையான சோம்பேறி அவன். அவன் திருமண பத்திரிக்கை கூட நான் தொலைபேசி வாங்கினேன். அதுவும் சென்ற வாரத்தில்தான் :-) .

தொலைபேசியில் அழைத்து மண்டகப்படி அர்ச்சனை செய்ய போதும்டா விடுடா என்றான். ஒழுங்கா 5 நிமிடம் திட்டு வாங்கிக் கொள் என்று சொல்ல பொறுமையாக கேட்டுக் கொண்டு திட்டி முடித்தவுடன் இரு கான்பிரன்ஸில் போடுறேன் அவங்ககிட்ட பேசு என்றான். அதான் என் பாலாஜி. இணைப்பு கிடைத்ததும் முதல் வார்த்தை சொன்னேன் உனக்கு நான் இன்றையிலிருந்து அண்ணன்மா. எதுவும் சேட்டை செய்தான் என்றால் சொல் கவனித்துக் கொள்கிறேன் என்று. சரி அண்ணா என்று சொன்னதும் அன்றைய ஒரு மணி நேர உரையாடலில் ஆத்மார்த்தமாக அண்ணா என்று அழைத்ததும் மனதில் இனிமையாக நிற்கிறது. இனிமையான நட்பு இன்று உறவாக அடுத்த நிலைக்கு நகர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கம் போல் வெளிநாட்டு சம்பாத்தியத்தினால் இன்னொரு முறை ஏமாற்றம். நேரில் காண மிகவும் விரும்பிய திருமணம். மறுபடியும் அதே ஓரிரு மாத இடைவெளியினால் இழந்திருக்கிறேன்.

இன்று மணமாலை சூடிக் கொள்ளும் பாலாஜி-மல்லிகா
தம்பதியினருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

என்னோடு நீங்களும் வாழ்த்துங்களேன்



பூமாலையே தோள் சேரவா….

இன்று ஒரு இனிப்பான நாள் எனக்கு.

எனது அன்பு நண்பன் லட்சுமிநாரயணனுக்கு இன்று திருமணம்.

கல்லூரியில் ஒரே வகுப்பில், ஒரே அறையில் என் கூட இருந்த நண்பன். மிக நெருக்கமான நண்பன். எப்போதும் எல்லோரும் நலமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். என் மீது தனிப்பட்ட பிரியம் கொண்டவன். அரியர் எனும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த என் மீது கவனம் செலுத்தி, மீள உதவி செய்தவன். தன்னுடைய ரகசியங்களை மற்ற நண்பர்களைவிட என்னிடம் மட்டுமே உரிமையாய் இயல்பாய் பகிர்ந்து கொள்பவன்.

காதலர்கள் என்றாலே கிண்டல் செய்து மகிழ்பவன். அவர்களை கோபப்படுத்தி ரசிப்பவன். இன்று திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறான்.

அவன் திருமணம்!! காதல் திருமணம்!!

நண்பர்கள் குழாம் எல்லாம் மண்டபத்தில் இருக்கிறது. நான் மட்டும் கணினி முன்பே. வெளிநாட்டிற்கு வந்தபின்பு தனிமையை உணர்த்தும் மற்றுமொரு தினம். கடந்த ஆகஸ்டில் திருமணம் வைக்கிறேன் என்று என்னிடம் சொல்லியிருந்தான். நானும் அந்த மாதத்தில் விடுப்பு எடுத்து சென்றேன். ஆனால் திருமணம் தள்ளி போய் விட்டது. இந்த வருடத்தில் இது இரண்டாவது ஏமாற்றம். இன்னொரு உயிர் நண்பன் குப்புசாமி திருமணம் மே மாதம் நடந்தது. இவனுடையது நவம்பர். மூன்று மாத முன் பின்னாக இருவரின் திருமணத்திலும் கலந்து கொள்ள இயலாது போயிற்று.

கல்லூரி படிக்கும்போது சொல்லிக்கொண்டேயிருப்பேன் உங்கள் திருமணத்தில் எல்லா வேலைகளும் நான் பார்ப்பேன் என்று. ஆனால் சொன்ன சொல்லை காக்க இயலாத சூழல் எனக்கு!!

காலையில் தொலைபேசினேன். திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. நண்பர்களின் ஆரவார இரைச்சலை கேட்க கேட்க மகிழ்வாய் இருந்தது.

உங்களோடு இணைந்து லட்சுமிநாராயணன் – வளர்மதி தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க பல்லாண்டு!!
எல்லா வளங்களோடும், நலங்களோடும்

வாழ்க பல்லாண்டு!!

திருமண மலர்கள் தருவாயோ…..



நன்றி: ஜி.கெளதம் http://gpost.blogspot.com/2006/08/blog-post_05.html

திருமண மலர்கள் தருவாயோ…..



நன்றி: ஜி.கெளதம் http://gpost.blogspot.com/2006/08/blog-post_05.html

நிலவுநண்பனுக்கு திருமணம்..

மகிழ்ச்சியான செய்தியோடு உங்கள் முன்னே….

கவிதைகளாலும், கருத்துகளாலும் மென்மையான உணர்வுகள் மூலமாகவும் நம் இதயம் நனைக்கும் நண்பர் நிலவுநண்பன் (ரசிகவ் ஞானியார்) தன் மனம் நிறைந்த நிலவை(ஜஹான்) கரம்பிடிக்கவிருக்கிறார். **காதல் திருமணம்**. :-)

திருமணம் வருகிற ஜுலை இரண்டாம் தேதி 02.07.2006, திருநெல்வேலி பாளையங்கோட்டை அன்னை திருமண மண்டபத்தில், காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் நடைபெற இருக்கிறது. அவரின் சார்பாகவும் அவர்களிருவரின் குடும்பத்தார் சார்பாகவும் அனைவரையும் திருமணத்தில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

* நிலவு நண்பன் இன்று இரவு இந்தியா செல்லவிருப்பதால் கொஞ்சம் பரபரப்பாக இருக்கிறார். வலைப்பூ அன்பர்களுக்கான அவரின் தனிப்ப்பட்ட அழைப்பும் விரைவில் வரும். **

மணமக்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
மு.முத்துகுமரன்

இதம்தரும் காதல்கவிதைகள் எழுதிடும் நேரம்

04-05-06 வெறும் எண்களாகத் தெரியலாம் பலருக்கு.

ஆனால் ஒரு நீண்டகாதல் திருமணமாக மலர்ந்திருக்கிறது இன்று. என் கல்லூரித்தோழன் குப்புசாமி- ராஜேஸ்வரியின் திருமணம் இன்று. நான் மிக மிக மிக விரும்பிய ஒரு நாள். பக்கத்தில் இல்லாவிட்டாலும் என் மகிழ்ச்சியில் எள்ளவிலும் குறைவில்லை. எங்கள் நண்பர்கள் அத்தனை பேரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு அற்புதத் திருநாள். அவர்களின் பத்தாண்டு அன்பின் புதிய பரிணாமம். புதிய உறவில் அதே இனிமையான காதலோடு பயணிக்க இருக்கிறார்கள்.

எப்படி ஆரம்பித்தது எங்களுக்குள் நட்பு…

1997 அக்டோபர் மாதம் கல்லூரியில் சேர்ந்து எல்லோரும் விடுதிக்கு போகிறோம். மொத்தம் 16 பேர் இருவர் ஆந்திரா, ஒருவன் டில்லி, ஒருவன் மலையாளி ஒருவன் சென்னை, மீதி பதினொன்றும் மதுரை, மதுரைக்கு தெற்கே. விடுதிக்கு நான் என் தந்தை தாயாரோடு,குப்புசாமி அவன் அப்பாவோடு, சாரி வாங்க காலர நடந்திட்டு வருவோம்னு எங்க அப்பா சொல்ல நடக்க ஆரம்பித்தோம். என் கையில் குடை,பெரியவர்கள் பேசிக்கொள்ள நாங்கள் இருவரும் பேசத் தொடங்கினோம்.

நான் முத்துகுமரன்..

நான் குப்புசாமி, வீட்ல கூப்பிடறது கணேஷ்.

குப்புசாமி உங்க சொந்த ஊர்

திருநெவேலி

நான் வத்திராயிருப்பு ஆனா இப்ப மதுரை…

லைப்ல என்ன செய்ய ஆசை முத்து

நல்லா படிக்கணும்… படிச்சி முடிச்சோன வேலைக்கு போகனும்… போனவுடனே மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்( எதுவும் சரியா நடக்கலை என்பது உபரித் தகவல்)

நிசமா முத்து

ஆமா

நான் ஒரு வருசம் இம்புரூவ்மெண்ட் எழுதி வந்திருக்கேன்… உன்னை மாதிரி ஆளுங்களோட இருக்கணும்( ஆனா நடந்த கதை வேற)

முன்னேறனும்..

நாம ரெண்டு பேரும் ரெம்ப நெருங்கிட்டோம்
எப்படி குப்ஸ்
நானும் மாமா பொண்னை லவ் பண்றேன்..
நீங்க ட்புள் சைடா??
ஆமா!!
இங்க சிங்கிள் சைட்… ஒரு தலை ராகம்….

கவலைப்படாத நிச்சயம் நடக்கும்..
ம். உன் வார்த்தை பலிக்கட்டும்
பத்து நண்பர்களிலும் இவன் மேல் எனக்கு கொஞ்சம் கூடுதல் பிரியம்… காதல் பற்றி பேசலாம், நம்ம ஜாதி என்று..
இப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு…

குப்ஸ் நாம எப்பவும் மச்சினன் உறவுதான்.. நான் பொண்ணு வீட்டுகாரந்தான்.
டேய் இப்பதான் பழக ஆரம்பிச்சே இருக்கோம். அதுக்குள்ள அந்தப்பக்கம் போயிட்ட:-))

அதுதாண்டா பாதுகாப்பு… பொண்ணு வீட்டுகாரங்கனா எப்பவும் சாப்பாடு கிடைக்கும். நமக்குள்ள பிரச்சனை வந்தாலும் வீட்டுக்கு வர்றதுக்கு ஒரு சாக்கு வேணும்ல

முத்து இதுதாண்டா உன்கிட்ட பிடிச்சது.

இப்படியாக தொடங்கியது..

அடுத்த ஒராண்டிலே எங்களிருவருக்கும் சண்டை
அதுவும் காதல் விசயத்திற்காகதான்…
விளையாட்டுதனமாக என் காதலை கிண்டல் பண்ண எனக்கு கோவம் வந்துவிட்டது. பேசுவதை குறைத்து கொண்டேன்..
பொதுவாக வேறு வழியின்றி கல்லூரியில் பேசும் சூழல்களில் மட்டும் பேசிக் கொள்வோம்.. ஆனால் வெளியாட்களிடம் எப்போதும் விட்டுக்கொடுத்ததே கிடையாது…

ஆனால் அவன் காதல் பற்றி பேசும் போது மட்டும் விதிவிலக்கு. ஏனோ அவனும் என்னிடம் மட்டும்தான் மனம் விட்டு பேசுவான்…

ஒருமுறை அவர்களுக்குள் ஊடல்…

மிகவும் மனம் நொந்து பேசினான். சரி வா நான் போன் பண்ணி பேசுறேன் சிஸ்டர்கிட்ட…

பேசினன்

அண்ணா அவர்கிட்ட கொடுங்க.

பேசினான்…
குப்ஸ் மன்னிச்சிக்கடா?
எதுக்குடா
உன்கிட்ட சரியா பேசமா இருந்ததுக்கு…

அதன் பிறகு இன்று வரை நெருக்கம் இறூக்கமாகவே இருக்கிறது.
எங்கள் நண்பர் குழாமின் மற்றொரு முக்கிய அங்கம் லஷ்மிநாரயணன்.. அவனுக்கு பொழுது போக்கே குப்ஸை வம்பிழுப்பதுதான்..
காதாலாம் காதல்… முன்னேற பாருடா குப்பா?
இன்னும் மாமா பொண்ணுன்னு….

பயங்கரமாக வெறுப்பேத்துவான். அப்ப நாங்க ரெண்டு பேரும் நகர்ந்திடுவோம். எங்களுக்குள்ள பேசி உற்சாகப்படுத்திகிட்டு அவன கலாய்ப்போம்…

எங்கள் குழுவிலே வெற்றி பெற்ற காதல் என்பது அவனுடையதுதான். மத்த பத்து பேருக்கும் கல்லூரி கால சுபயோக சுபதினத்திலேயே ஆப்பு மற்றும் சங்கூதப்பட்டு விட்டது.

சகோதரி குப்ஸ்ற்கு மிகப்பொருத்தமானவர். அமைதி. அவன் மேல் அளவு கடந்த அன்பு. ஆனால் வெளிக்காட்டிக்காத குணம்.

என்ன செய்ய நம்மாள் கொஞ்சம் ரொமாண்டிக் டைப்….

முத்து காதல் வசனம் பேசுனா எந்த உணர்ச்சியும் காட்டாம தேமேனு இருக்காடா… எப்பிடி காலத்த கடத்த போறேனோ

கல்யாணம் பண்ணுடா, அப்புறம் பாரு பிரியமா நடந்துக்குவாங்க

அது தெரியும்டா

மனுசனுக்கு லவ்வுனா ஒரு திரில் வேணாமா?

திரில் வேணூமா கல்யாணம் பண்ணு..

டே எனக்காக பேசவே மாட்டியா…

நிச்சயம் மாட்டேன்.
**
கல்லூரி முடிந்து மேற்படிப்புக்காக ஜெர்மனி போனான். இப்போது அங்கு ஆராய்ச்சியாளனாக இருக்கிறேன்.
இந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் அதிகம் பேசியதும் காதலைப்பற்றியும் அவன் திருமணத்தை பற்றியும்தான்….
மனசு சங்கடமாய் இருக்கும் போதெல்லாம் என்னோடு பேசுவான். சின்ன சின்ன அழுத்தங்களை என்னோடு பரிமாறி இளைப்பாற்க் கொள்வான். அப்படிப்பட்ட ஒரு நண்பனாய் இருப்பதே எனக்கு அதிகப்படியான மகிழ்ச்சி…
**
இன்று திருமணம்…

ஆனால் நான் இங்கு துபாயில்…

ஆனால் திருமண நிகழ்வத்தனையும் என் கண்களுக்குள்.

பொண்ணு வீட்டுகாரன் இல்லையா.. அதுனால கொஞ்சம் பரபரப்புதான்…

திருமண மண்டபம்.. காலையில்
குப்புசாமி அப்பா: வாடா முத்து… ஆளே மாறிட்டியே..
நரம்பா இருந்த.. ம்ம்ம் சதையெல்லாம் வச்சு அசத்துற
கிண்டல் பண்ணாதீங்கபா.
நீங்க இன்னும் அப்படியே இருக்கீங்க…
உங்க 60ம் கல்யாணம் எப்பப்பா
அதை ஏன்பா ஞாபகப்படுத்திற… மறுபடியும் அதே பொண்ணுன்னு சொல்றாங்க்… மனசனுக்கு ஒரு மாற்றம் வேணாமா??
இருங்க அம்மாகிட்ட சொல்றேன்.. புதுப்பொண்ணு கேக்குறீங்கனு…
வேண்டாம்டா சரினு வேறொருத்தியை கட்டி வச்சாலும் வச்சிடுவா… அவளே போதும்…
அது…
குப்பன் சாதிச்சிட்டன்லாபா…
என் பையன்ல. அதான்..
குப்புசாமி அப்பாதான் எனக்கு ரெம்ப நெருக்கம்… தடலாடி ஆனால் அணுகிபார்த்தால் மென்மையானவர்..

அப்பாவை சந்தித்துவிட்டு வந்தால் நண்பர்கள் படை….

வழக்கமான நலம் விசாரிப்பகளோடு அவனவனுக்கு எப்போது திருமணம் என்ற அதிமுக்கியமான விசாரணைகள்..வேலை சூழல் பற்றிய செய்திகளோடு அடுத்த திருமணம் யாருக்கு என்பதை உறுதி செய்து கொள்கிறோம்.அவன் லஷ்மி நாரயணன்….( மகனே ஊருக்கு வரும் போது கல்யாணம் வைக்கல மாறுகால் மாறுகைதான்!!!).
சடங்குகள் ஆரம்பிக்கிறது.

மணமேடையில் குப்பனுடைய ஒவ்வொரு செய்கைக்கும் ரன்னிங் கமெண்டரி நடக்கிறது..
அங்க பாரு மாப்பிள்ளைய
என்னா பவ்யம்.. என்னா பொறுப்பு….
பொறில மாட்டுன எலிகதைதாண்டா இனிமே அவன் வாழ்க்கை…
லக்ஸ்(லஷ்மி) அடுத்த எலி நீங்கிறத மனசுல வச்சுகிட்டு பேசு… அதே மாதிரி நான் சொன்ன பட்டு வேட்டி விவகாரமும் ஞாபகம் இருக்கடும்
அய்யர் சொல்றதை வரி மாறாம ஒப்பிக்கிறான் பாரு… குப்ஸ் எங்கயோ போயிட்டாண்டா!!!

மாங்கல்யம் தன்ந்துனானே……..

கெட்டி மேளம் கெட்டி மேளம்………

எல்லோருடய அட்சதைகளோடு என்னுடையதும்…..
ஒவ்வொருத்தாராய் வாழ்த்து சொல்ல நண்பர்கள் முறை வரும் வரை காத்திருந்தோம்…

மாப்ள… வாழ்த்துகள்
ஒருவழியா எல்லாம் நல்லபடியா முடிஞ்சது… உண்மையிலே சாதிச்சிட்டடா… எல்லாரும் இதைப்பாக்கத்தான ஆசப்பட்டோம்… நல்ல நினைப்புக்கு எப்பவும் நல்லதேதான் நடக்கும்..

சிஸ்டர் எங்க கண்ணையே ஒப்படைக்கறோம்.. கண்ணீர் வராமா பார்த்துக்குங்க….:-)))

கிண்டல்கள்… கேலிகள்………………………………

வழக்கம் போல பந்தி பறிமாறலிலும் பந்தியிலும் எங்கள் குழாம் பட்டையை கிளப்பியது……

இதுதான் நடந்திருக்கும்…
என்ன இந்த ஜீவன் அங்கில்லாம் இங்கிருக்கிறது……

குப்பா
இனிய திருமண வாழ்த்துகள்டா!!!!

லே ஞாபகம் இருக்கா? உன் கல்யாணத்துக்கு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து எடுத்து கொடுக்கிற புகைப்படம்தான் என் அன்பளிப்புனு சொன்னனே…
நிறைவேத்த முடியலடா….

எல்லாம் முடிஞ்சிட்டா எப்படி,,,,

வாழ்க்கை முழுக்க உங்களுக்கு ஒருவகையில நான் கடன்பட்டுத்தான் இருக்கறதவே இருக்கட்டும்….
அடைக்கும் வரைக்கும் தொடரலாமே… அதனாலா சந்தோசம்தான்.

உங்களுக்கான கவிதை உங்களுக்காக மட்டுமே…

அஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்

அன்புடன்

முத்துகுமரன்