‘கவிதை’ பகுப்புக்கான தொகுப்பு
கூடு திரும்பல்
மெளனங்களான காயம் படர
பேசாதே இறையாண்மை
முதல் மூச்சை விடாது வெடித்துச் சிதறிய குழந்தைகள்
மறக்கமுடியாத தாய்களின் மரண நிர்வாணங்கள்
உறுப்பறுந்த உறவுகள்
சிதைக்கப்பட்ட தொப்புள் கொடி
மொட்டைப் பனையாய் என்னை
வேரறுத்துவிட்டு
பேசாதே இறையாண்மை
கொடி
மூவர்ணக் கொடி
அறுக்கிறது
தமிழன் தொப்புள்கொடி
உதிர்த்துப் போன பூக்களில்
தேசத் தாயின் திலகத்தில்
வெடித்துச் சிதறிய எம் தாய்களின் சூல்கள்
கருவறைச் சதைகளோடு
கதறல்களுக்கு காதுகளையும்
பிணக்குருதி வாடை சுவாசிக்கவும்
ஆணையிடுகிறது சுதந்திரக் கொடி
அனுமதித்த அளவோடு அழ
மறத்துப் போகாத உணர்வெஞ்சியிருப்பின்
மரித்துப் போகலாம்
இல்லையேல்
மண்டியிடாது கொடி கிழித்துப் போகலாம்
நாளை நம் கொடி
அறுபடாதிருக்க
யுத்தவாடை – நெல்லை ஜெயந்தா
இறையாண்மை
குண்டுகள் இடு!
கொலைகள் செய்!
வன்புணர்!
யோனிகள் சிதை!
வாழ்விடங்கள் தகர்!
சவக்குழிகள் பயிரிடு!
மனிதநேயம் நிர்வாணமாக்கு!
பட்டியலிடு, இறந்த குழந்தைகளையும் தீவிரவாதிகளாக்கி!
எல்லாம் செய்!
அரசாக!
அரசாக!
எம்
தமிழன் விழிக்காதவரை
உன் இறைமைக்கு
உத்திரவாதம் கொடுக்கவும்,
கட்டிக் காக்கவும்,
கூடவும் ஆசிகளோடும்
சிரித்துக் கொண்டிருப்பர்,
காந்தி தேசத்து அகிம்சை ராமர்கள்!
முடிவுறாத் தனிமை
அருகாமையற்றதின் வலியின் கீறலில்
தொலைவின் நீளத்தை தீடிரென உணர்ந்து கொள்கிறது
இறுக்கம் கொண்ட மனது
பிறர் பார்வை மறைக்க
சலனமற்ற முகமூடியணிந்து மறைந்து கொள்கிறது வெறுமை
சொற்ப கணங்களே நீடித்தாலும்
எதன் காரணம் என்றறிய இயலாது
தாளவியலா அழுத்தத்தை தந்துவிட்டுப் போகிறது
முடிவுறாத் தனிமை
மறுமொழிகள் (8)
கருத்துத் தெரிவிக்கவும்
மறுமொழிகள் (1)



