‘இசாக்’ பகுப்புக்கான தொகுப்பு
துபாயில் தோழர் இசாக்கின் குறும்படம் திரையிடல் நிகழ்ச்சி.
இரண்டாம் கருவறை, காதலாகி, மழை ஓய்ந்த நேரம். மெளனங்களின் நிழற்குடை போன்ற கவிதை தொகுப்புகளின் ஆசிரியரும், துவக்கு இலக்கிய அமைப்பு, அமீரகத்தமிழ்கவிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் இசாக்கின் ” ஒரு குடியின் பயணம்” குறும்படம் திரையிடல் நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 04.01.2008 அன்று மாலை 5.30 மணி அளவில் துபாய் கராமாவிலுள்ள ”சிவ் ஸ்டார்” உணவகத்தில் திரையிடப்பட இருக்கிறது. நண்பர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினா சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
”குறும்பட திரையிடல் மற்றும் குறுந்தகடு வெளியிடல் அழைப்பிதழ்”
இசாக்கின் ஒரு குடியின் பயணம் குறும்படம் திரையிடல்,
அன்பிற்கினிய நண்பர்களே
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் வாய்ப்பு வாய்த்திருக்கிறது.
ஆம்.. எனது குறும்படமான ஒரு குடியின் பயணம் திரையிட உள்ளோம் துபாயில்.
இந்த சூழலில் இப்படம் உருவாக துணை நின்ற நண்பர்களை நன்றியோடு நினைக்கிறேன்.
ஒளிப்பதிவாளர் நண்பர் கவின், படத்தொகுப்பாளர் பா. அரிகோபி, இசையாளர் ரசினி, தயாரிப்பில் துணை நின்ற வ.ச.சுரேசு குமார் என அனைத்து உறவுகளுக்கும் என் அன்பு நன்றி.
அமீரகத்தில் வசிக்கும் நண்பர்கள் அவசியம் கலந்துக்கொண்டு ஊக்கமளியுங்கள்.
இசாக்கின்
ஒரு குடியின்
பயணம்
குறும்படம் திரையிடல்,குறுந்தகடு வெளியிடல்.
நாள்: 04-01-2008 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: சிவ் ஸ்டார் உணவகம்- கராமா, துபாய்
அனைத்து தோழர்களும் நண்பர்ளுடன் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அன்புடன்
துவக்கு இலக்கிய அமைப்பு
தாய்மண் வாசகர் வட்டம்
050 5823764- 050 7763653
மறுமொழிகள் (3)