‘அழைப்பிதழ்’ பகுப்புக்கான தொகுப்பு

ஊடகச் செல்வர் சாத்தான்குளம் அப்துல்ஜப்பார் அவர்களுடன் அமீரகத்தில் கலந்துரையாடல்

இனிய நண்பர்களுக்கு
வரும் வியாழன் மாலை 7.30 மணி அளவில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பாக அமீரக நண்பர்களால் வாப்பா என்று அன்போடு அழைக்கப்படும் ஊடகச் செல்வர் திரு.சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அமீரக நண்பர் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கிறேன். இவரது குமாரார் ஆசிப் அண்ணாச்சி என்பது கூடுதல் தகவல்

அன்புடன்

முத்துகுமரன்

அமீரகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமானுடன் கவிதைக் கூடல்

கவிக்கோ அப்துல்ரகுமான் பங்கேற்கும் கவிதைக்கூடல்

அன்பு நண்பர்களே!

அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை சார்பாக கவிக்கோ ”அப்துல் ரகுமான்” பங்கேற்கும் கவிதைக்கூடல் நிகழ்ச்சி நாளை மாலை கராமா சிவ்ஸ்டார் பவனில் நடைபெறுகிறது. அமீரகத்தில் இருக்கும் அனைத்து தமிழன்பர்களும் பங்கேற்கும்படி அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவையின் சார்பாக உங்களை அன்போடு அழைக்கிறேன்.

இடம்: சிவ்ஸ்டார் பவன்

நேரம்: மாலை 7.30 மணி

தொடர்புக்கு

முத்துகுமரன் 050 -6243115; கவிமதி: 050-5823764

இசாக்: 050-4804113, பரத் :050-6536125

அன்புடன்

முத்துகுமரன்

அன்புடன் அழைக்கிறேன்

வணக்கம்,
அன்பு நண்பர்களே! அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பாக, நண்பனின் ”விரியக் காத்திருக்கும் உள்வெளி” மற்றும் ”மு.முத்துகுமரனின் உயிர்த்துளி” கவிதை நூல்கள் வெளியீட்டு விழா வருகின்ற 18.04.2008 அன்று மாலை 6 மணி அளவில் துபாய் கராமாவில் எஜுஸ்கேன் பயிற்சி மையத்தில் மக்கள் பாவலர், புரட்சிபாவலர் இன்குலாப் அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது.

அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி என் சார்பாகவும், தோழர்களின் சார்பாகவும் அன்போடு அழைக்கிறேன்.