‘அறிவிப்பு’ பகுப்புக்கான தொகுப்பு

இடைவேளை

ஒன்றரை வருடங்களாக இயங்கினாலும் இதுவரை 101 பதிவுகளே பதிந்திருக்கிறேன். இணையத் தொடர்புக்கு பின் என்னுள் எழுந்த மாற்றங்கள் பல. நான் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை சரியானதாகவே இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. எப்போதாவது பதிவிடுவதற்கு முதல் காரணமாக நான் நினைப்பது எனது சோம்பேறித்தனமே. புத்தாண்டில் அதை களைவதாய் உத்தேசம். ஒரு கவிஞானாய் எனக்குள் ஒரு தேக்கம் இருப்பதை உணர்கிறேன். அதற்காகவே இந்த சிறிய இடைவேளை. எழுதுவதிலிருந்து வாசிப்பதிலிருந்து. ( இப்ப மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்பவர்களுக்கு நற நற :-) ).

மீண்டும் புதுப்பொலிவுடன் வருகிற தமிழ்ப் புத்தாண்டாம் ”தை” திங்களில் இனிப்பான செய்தியோடு வருகிறேன்.

என் பங்கிற்கு ஒரு அறிவிப்பு

வேற எதாயாச்சும் எதிர்பார்த்து வந்து இருந்தீங்கனா நான் பொறுப்பு அல்ல:-)

இன்று தமிழ்மணத்தின் அறிவிப்பு பகுதியில் இடம் பெற்றிருந்த
பதிவில் வாசித்த போது என்னுடைய பெயரும் இருந்தது. அங்கே பின்னூட்டமிட வசதியில்லாததால் என் பதிவிலே என் எண்ணத்தை சொல்லிச்விடுகிறேன்.

//தமிழ்மணத்திலே திரட்டப்பட்ட ஒரு பதிவிலே சொல்லப்பட்டதுபோல, தமிழ்மணம் நியோ, பாலச்சந்தர் கணேசன், முத்துக்குமரன், வரனையான் ஆகியோரின் பதிவுகளை நீக்கவோ ஓரம் கட்டவோ எத்தருணத்திலும் முயலவில்லை என்பதைத் தெளிவாக இவ்விடத்திலே தெரிவிக்க விரும்புகிறது. //

நான் எந்த தருணத்திலும் தமிழ்மணத்தால் ஓரங்கட்டப்படுவதாக உணரவில்லை. வலைபதிய தொடங்கிய சில மாதங்களிலேயே நட்சத்திர வாய்ப்பை வழங்கியது தமிழ்மணம்தான் என்பதை இன்றும் நினைவு கூற விரும்புகிறேன்.

பொதுவாக அவதூறுகளை நான் பதிலளிப்பதில்லை என்பதோடு அதற்கு எதிர்வினை புரியாதிருப்பது அதனை நான் நிராகரிக்கிறேன் என்பதால்தான். என் பதிவுகள் விதிகளுக்குட்படாததாக இருந்தால் அதை நீக்க அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் மதிக்கவே செய்கிறேன்.

என்னுடைய நூறாவது பதிவில் சொன்னது போல் பதிவொழுக்கம் என்பது தனிமனித விடயம். அதற்கு திரட்டிகளோ இன்ன பிற அமைப்புகளோ பொறுப்பாகாது. எப்போதும் போல ”தமிழ்மணத்தில்” தொடர்கிறேன் என்று தெரிவித்து கொள்கிறேன்.