‘அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி’ பகுப்புக்கான தொகுப்பு

யுத்தவாடை – நெல்லை ஜெயந்தா


பதுங்கு குழிக்குள்

துள்ளி விழுந்து

காலொடிந்து கதறும்

கன்று குட்டிகள்

விமானத்தைப் பார்த்துப்

பயத்தில்

கதறும்

பறவைகள்

குண்டுச் சத்தத்தில்

தொண்டை

அடைத்துப்போன

குயில்கள்

இறந்த வீடுகளுக்குள்

குஞ்சுகளைத் தேடி

அலையும்

குருவிகள்

ரத்தம் வழியும்

பூக்களில்

யுத்த வாடையை உணரும்

வண்ணத்துப் பூச்சிகள்

இவைகளையேனும்

காப்பாற்றுங்கள்

இவற்றில்

யாரும்

தமிழர்கள்

இல்லை