ஜூன், 2009 க்கான தொகுப்பு|மாதாந்திர தொகுப்பு பக்கம்

கலைஞருக்கு நன்றி -வணங்காமண் கப்பலுக்கு இலங்கை அனுமதி

ஈழத்தில் அவலப்படும் உறவுகளுக்காக புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணங்காமண் நிவாரண கப்பலை அனுமதிக்க இலங்கை அரசு சம்மதித்து இருக்கிறது. இதற்காக துரித முயற்சி எடுத்த தமிழக முதல்வர் கலைஞருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் நன்றி.

பேசாதே இறையாண்மை

முதல் மூச்சை விடாது வெடித்துச் சிதறிய குழந்தைகள்
மறக்கமுடியாத தாய்களின் மரண நிர்வாணங்கள்
உறுப்பறுந்த உறவுகள்
சிதைக்கப்பட்ட தொப்புள் கொடி
மொட்டைப் பனையாய் என்னை
வேரறுத்துவிட்டு
பேசாதே இறையாண்மை

ஊடகச் செல்வர் சாத்தான்குளம் அப்துல்ஜப்பார் அவர்களுடன் அமீரகத்தில் கலந்துரையாடல்

இனிய நண்பர்களுக்கு
வரும் வியாழன் மாலை 7.30 மணி அளவில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பாக அமீரக நண்பர்களால் வாப்பா என்று அன்போடு அழைக்கப்படும் ஊடகச் செல்வர் திரு.சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அமீரக நண்பர் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கிறேன். இவரது குமாரார் ஆசிப் அண்ணாச்சி என்பது கூடுதல் தகவல்

அன்புடன்

முத்துகுமரன்

இலங்கை சுற்றுலா

குருதி
கிழிந்த யோனி
பாரத மாதா
காந்திய ஆணுறை
இலங்கை சுற்றுலா

வாழிய பல்லாண்டு