ஜனவரி, 2009 க்கான தொகுப்பு|மாதாந்திர தொகுப்பு பக்கம்
முத்துகுமரா வாழ்வாய் நீ வரலாறாக
உன் எண்ணங்களை உள்ளத்தில் ஏற்போம்
வாழ்வாய் நீ வரலாறாக தமிழர் தம் உள்ளத்தில்!
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் – அதுதான், இந்திய உளவுத்துறை – ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது…
இந்திய -இலங்கை ஒருநாள் போட்டியை கண்டுகளிக்க பிரணாப் கொழும்பு விஜயம்
நாளை முதல் தொடங்க இருக்கும் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை கண்டுகளிக்க இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு விரைகிறார். துடுப்பாட்டம் குறித்த ஆலோசனைகளை அணித்தலைவர் மகி க்கு அளித்துவிட்டு திரும்பும் போது அவருக்கு சென்னைத் தீவுத்திடலில் உலகின் ஒரே தமிழின தலைவர் தலைமையில் வரவேற்பு நிகழ்வுக்கும் கவியரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தமிழர்களே தமிழனின் பிணங்களின் மீதமர்ந்து கண்டு களியுங்கள்!
ஈழம், கலைஞர், திருமாவளவன் போராட்டம்,சீமான் விடுதலை,
கடந்தமாதம் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாகக்கூறி கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமான், பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்துர் மணி, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் செயலாளர் பெ.மணியரசன் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிணை வழங்கியிருக்கிறது. சீமான் பிணைக்கு விண்ணப்பித்ததை ஏளனம் செய்த இந்த தேசத்தின் முழுமுதன்மையான தேசபக்தர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இந்திய தேசியத்தின் அரசியலைமைப்பு தன் குடிகளுக்கு வழங்கியுள்ள சட்ட உரிமைகளுள் ஒன்றுதான் பிணைக்கு விண்ணப்பிப்பது. அதே போல ஈழ விடுதலைக்காக உள்ளப்பூர்வமாக கொடுப்பவர்களின் நேச உணர்வு என்பது அரசின் சலுகைக்குட்பட்டு வரையறுக்கப்பட்ட உணர்வல்ல. அது தன் இனத்தின் மீதான பற்றின் காரணமாக வெளிப்படும் உணர்வு. ஈழ விடுதலைக்காக குரல்கொடுத்தால் அடக்குமுறைகளுக்கு உட்பட நேரிடும் என்பதைக் கூட அறியாத சிந்தனைத் திறனற்றவர்கள் அல்ல. இந்திய தேசியத்தின் ஏமாற்று முகத்தை தன் உரையின் வாயிலாக கிழித்தெறிந்த சீமான் அதன் விளைவுகளை நன்கு அறிந்தவரே. அதனால் அவர்கள் யாரும் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல. ஊடகங்களின் வெளியிடும் செய்திகளை படித்துக்கொண்டு சீமான் போன்றவர்களும் அவ்வாறே எண்ணுவார்கள் என்று முடிவு செய்து கொள்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் உண்மை அதுவல்ல.
இந்திய நாட்டை ஆண்ட, ஆளும் தலைவர்களில் எண்பது விழுக்காடுகளுக்கும் மேல் பிணைகளில் வெளிவந்திருப்பவரே. கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான சங்கரச்சாரியே பிணையில் இருக்கும் போது சீமான் பிணைக்கு விண்ணப்பத்தது என்பது அச்சத்தின்பால் ஏற்பட்டது இல்லை. பிணையில் வந்தாலும் மறுபடியும் ஈழ விடுதலைக்காக அவரது குரல் ஒழித்துக்கொண்டுதான் இருக்கும். சிறைச்சாலை சீமான் போன்றவரை சிதைக்காது, செதுக்கும்.
ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் 5 இலட்சம் மக்களைக் காக்க வேண்டுமென்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருமாவளவன் அவர்களை நன்றி பெருக்கோடு உணர்வுள்ள தமிழர்கள் காண்கிறார்கள். உலகம் எங்கும் விரிந்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு அவரது உண்ணாவிரதம் ஒரு வித நம்பிக்கையுணர்வைத் தந்திருக்கும். உண்ணாவிரதத்தை பாதியிலே முடித்துக்கொண்டாரே, சாகவேயில்லையே எல்லாம் நாடகம் என்றும் அவரது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லையே ஏன் முடித்துக்கொண்டார் என்று பரிவோடு கேட்பவர்கள் அதைச் செய்ய மறுக்கும் மத்திய அரசின் மீது மட்டும் மாறப்பற்று கொண்டிருப்பதேன்?? திருமாவளவனால்தான் செய்யமுடியவில்லை என்று ஏளனம் செய்பவர்களே, செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி கேள்விகளைத் திருப்புங்கள்.
திருமாவளவன் என்பவர் ஒற்றை மனிதர் அல்ல, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு அடையாளம், அவர்களின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். ஆகையால் அவர் போராட்டத்தின் நியாயங்களை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவரது உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்தே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போராட்டம் தொடர்ந்திருந்தால் பாவம் இந்திய தேசியம் பூசிக்கொண்டிருக்கும் அகிம்சை அவதாரம்தான் அம்மணமாகிப் போயிருக்கும். அகிம்சை தேசத்து முகமுடி களையப்படாதிருக்க உதவிதான் செய்திருக்கிறார். இந்த போராட்டம் குறித்த இன்னொரு நகைச்சுவை பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியினால் அதிர்ந்துதான் இப்போராட்ட யுக்தியையே கையில் எடுத்தாரான்பது. இந்திய அளவில் மாயாவதின் எழுச்சி என்பது வரவேற்கக்கூடிய ஒன்று. சிறுத்தைகளிலிருந்து பிரிந்து சென்ற செல்வப்பெருந்தகை அவர்களுக்கு மிகப்ப்பெரிய பிம்பத்தை தருவதைக் கண்டால் சிரிப்பாகத்தான் வருகிறது. செல்வப்பெருந்தகையுடன் இருப்பது செல்வமே அன்றி சிறுத்தைகளல்ல!
ஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார் என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஈழமக்களே இல்லை அவர்கள் எல்லாம் இலங்கை மக்களே என்றுரைக்கும் ஜெயலலிதா இருப்பதால்தான் கருணாநிதியை ஆதரிக்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸின் துணை இல்லாமல் ஆட்சியைக் காப்பாற்ற்க் கொள்ள அவர் அதிகம் சிரமப்ப்பட வேண்டி இருக்காது. மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அவர்கள் கவலைப்படப் போவதில்லை. ஆனால் தமிழினத்தின் எதிரிகளை அடையாளப்படுத்தி அவர்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி மக்கள் துணையோடு புறக்கணிக்க செய்வதே அவரது அரசியல் வாழ்விற்கான தலைமையான சாதனையாக இருக்கும். மாநில சுயாட்சிக்காக போராடிய இயக்கத்தின் தலைவராக இருப்பவர் டெல்லியின் இனவழிவுப்புக்கு துணை போவது என்பது மன்னிக்க முடியாத துரோகமாகும்.
காங்கிரஸ் உடனான உறவை முறித்துக்கொண்டால் அவர்கள் அதிகபட்சமாக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார்கள். தமிழின எதிரிகளை ஒன்றாய் வெல்வதற்கு அதைவிட வேறு அற்புதமான வாய்ப்பொன்று அமையாது, அதற்காக தேர்தலுக்கு முன்பே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற தேவையில்லை, அவர்களினால் தேர்தல் களத்தில் சிலநூறு வாக்குகளை தவிர வேறெந்த ஆதாயமும் இல்லை. தமிழின எதிர்களை வென்று கணிசமான நாடளுமன்ற உறுப்பினர்களோடு டெல்லி சென்றால் தேவையானதொரு, நாம் விரும்பும் அழுத்தத்தை புதிய அரசாங்கத்தின் மீது செலுத்த முடியும் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தன் நலனுக்காக கூட்டணிகளை மாற்றிக்கொண்ட வரலாற்றை கொண்டவருக்கு தன் இன நலனுக்காக மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் இருப்பை அவர்களுக்கு புரிய வைக்க இதைவிட சிறந்த தருணம் வேறெதுவுமில்லை.
இறுதியாக
கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது. நிச்சடன் வீழாது எம்தமிழினம்! இன்றைய மிகக் கடினமான துயரச் சூழலையும் தாண்டி மீண்டு வரும் தமிழினம் வரலாறாக!!!
பாலா, இளையராஜா,நான் கடவுள்
கண்ணில் பார்வை போனபோதும் கன்ணில் ஈரம் ததும்பும் – ஸ்ரேயா கோசல்
ஓம் சிவ ஓம் – விஜய பிரகாஷ்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் – மது பாலகிருஷ்ணன்
ஒரு காற்றில் அலையும் சிறகு – இளையராஜா
அம்மா உன் பிள்ளை – சாதனா சர்கம்
மாதா உன் கோவிலில் – மதுமிதா
ஒவ்வொரு பாடலைப் பற்றியும் விளக்கமாக சொல்ல விரும்பவில்லை. இது முழுக்க முழுக்க இளையராஜாவின் ”’பாலா” Special
பண்ணைபுரத்தாரின் உயிரை உருக்கும் இசைப் படையல்
சேதுவை மிஞ்சி
நரம்புகளை ஊடுருவிச் செல்ல
காத்திருக்கிறது பிண்ணனி இசை
பாலாவின் வார்த்தையிலே சொல்வதானால்
With the Grand Music of Mastreo Ilayaraja
நான் கடவுள்
மறுமொழிகள் (1)
மறுமொழிகள் (6)
மறுமொழிகள் (44)