ஏப்ரல், 2008 க்கான தொகுப்பு|மாதாந்திர தொகுப்பு பக்கம்

அன்புடன் அழைக்கிறேன்

வணக்கம்,
அன்பு நண்பர்களே! அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பாக, நண்பனின் ”விரியக் காத்திருக்கும் உள்வெளி” மற்றும் ”மு.முத்துகுமரனின் உயிர்த்துளி” கவிதை நூல்கள் வெளியீட்டு விழா வருகின்ற 18.04.2008 அன்று மாலை 6 மணி அளவில் துபாய் கராமாவில் எஜுஸ்கேன் பயிற்சி மையத்தில் மக்கள் பாவலர், புரட்சிபாவலர் இன்குலாப் அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது.

அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி என் சார்பாகவும், தோழர்களின் சார்பாகவும் அன்போடு அழைக்கிறேன்.

உன் மடியுறங்கும்

நினைவு தடுமாறிக்கோண்டிருக்கும்
இத்தருணத்தில் கூட
எனக்களித்த உன் முதல் பாடலில்
என்னை மீட்டுக் கொள்கிறேன்
உனக்கு பிடிக்காத செய்கைகள் இதுவெனினும்
என்னை இழந்திடாது
காத்துக் கிடக்கிறேன்
உன் மடியுறங்கும்
நொடிக்காக