மார்ச், 2008 க்கான தொகுப்பு|மாதாந்திர தொகுப்பு பக்கம்
சுமையினோடு
தோல்வியாகவே முடிகிறது
வார்த்தைகளாக உருமாற்ற முனைந்த
உரையாடல்களற்ற தருணங்களில்
பிரிவின் சுமையினோடு
வெறுமையாகிப் படர்ந்த
தவிப்புகள்
தாயாகவே…
கருவறையில் சுமக்கவுமில்லை,
உயிர்ப் பால் உதிரமும் கொடுக்கவில்லை!
அன்னை வயதுக்குரிய இடைவெளியுமில்லை.
ஆராவரங்களின்றி நொறுங்கிக் கிடக்கின்றன
எல்லா வரையறைகளும்,
இலக்கணங்களும்!
எந்தவித உரிமை எல்லைகளுக்குள்ளும்
சிக்குப்படாதிருக்கிறது உன் அன்பு!
எனக்குள் நீயிருக்கிறாய்,
என் இரண்டாவது..,
இல்லை
தாயாகவே!!
மரணங்கள்
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன மரணங்கள்
உணர்தலின் தொலைவிற்கேற்ப
துயரின் அதிர்வுகள்
மனதில்,
எந்தவித சலனங்களையும் ஏற்படுத்திடாது,
நம்மைச் சுற்றி கேட்பாராற்று கிடக்கிறது
கவனிக்கபடாத மரணங்கள்
வாழ்தலின் போது உயிர் சுமந்த மதிப்பிற்கான
விலைப்பட்டியலோடு அல்லது
விதிக்கப்பட்ட பாவப்பட்டியல்களோடு
மண்ணிற்குள் மறைகின்றன சவங்கள்
மீட்டெடுக்கபடாமலே கிடக்கிறது
மரணங்களுக்குப் பின்னும் சமத்துவம்!
ரசித்ததற்காக, தோழமைக்காக, உணர்வுக்காக, உறவுக்கானதென
கவனமாக தரம் பிரிக்கபடுகின்றன
உதிர்க்கப்பட்ட கண்ணீர்த்துளிகள்
சில நேரம் துரோகமென்றெழைக்கப்படினும்
விடைபெற்ற உயிர்க்கான
மெளனத்தில் எஞ்சியிருக்கிறது
அடையாளங்களைக் கடந்த
மனிதம்
மறுமொழிகள் (3)
மறுமொழிகள் (1)
மறுமொழிகள் (10)