மணமாலையும் மஞ்சளும் சூட…
தொலைபேசியில் அழைத்து மண்டகப்படி அர்ச்சனை செய்ய போதும்டா விடுடா என்றான். ஒழுங்கா 5 நிமிடம் திட்டு வாங்கிக் கொள் என்று சொல்ல பொறுமையாக கேட்டுக் கொண்டு திட்டி முடித்தவுடன் இரு கான்பிரன்ஸில் போடுறேன் அவங்ககிட்ட பேசு என்றான். அதான் என் பாலாஜி. இணைப்பு கிடைத்ததும் முதல் வார்த்தை சொன்னேன் உனக்கு நான் இன்றையிலிருந்து அண்ணன்மா. எதுவும் சேட்டை செய்தான் என்றால் சொல் கவனித்துக் கொள்கிறேன் என்று. சரி அண்ணா என்று சொன்னதும் அன்றைய ஒரு மணி நேர உரையாடலில் ஆத்மார்த்தமாக அண்ணா என்று அழைத்ததும் மனதில் இனிமையாக நிற்கிறது. இனிமையான நட்பு இன்று உறவாக அடுத்த நிலைக்கு நகர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கம் போல் வெளிநாட்டு சம்பாத்தியத்தினால் இன்னொரு முறை ஏமாற்றம். நேரில் காண மிகவும் விரும்பிய திருமணம். மறுபடியும் அதே ஓரிரு மாத இடைவெளியினால் இழந்திருக்கிறேன்.
இன்று மணமாலை சூடிக் கொள்ளும் பாலாஜி-மல்லிகா
தம்பதியினருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
என்னோடு நீங்களும் வாழ்த்துங்களேன்

My Heartiest Congratulation.
உங்க நண்பருக்கும், அவரது துணைவியாருக்கும் இனிய வாழ்த்துகள்.
ஆமாம், உமக்கு எப்போவே நாங்க வாழ்த்துறது.
நன்றி சந்திப்பு..
பரஞ்சோதி
//ஆமாம், உமக்கு எப்போவே நாங்க வாழ்த்துறது.//
வாய்கிழிய கேளும். பார்த்து கட்டி வைக்காம என்ன கேள்விகேட்கிறீரா?? எல்லாம் நாங்களாவா கேட்க முடியும்
மூத்ததலைமுறை நீங்க புரிஞ்சுக்க வேணாம்:-))))))))))
உங்க நண்பருக்கும், அவரது துணைவியாருக்கும் இனிய வாழ்த்துகள்.
உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்!
முத்துகுமரன்,
பாலாஜி-மல்லிகா தம்பதியினருக்கு மனப்பூர்வமான திருமண நல்வாழ்த்துக்கள்!
// மூத்ததலைமுறை நீங்க புரிஞ்சுக்க வேணாம்:-)))))))))) //
மூத்த தலைமுறைக கல்யாணத்தைப் புரிஞ்சுக்கிட்டதால் தான் கமுக்கமா இருக்காய்ங்களோ என்னவோ?!
))
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி என்றென்றும் அன்புடன் பாலா, லொடுக்கு
வாங்க வாத்தியாரே. மாணவன் குடிலுக்கு வாழ்த்தோடு வருகை தந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.
//மூத்த தலைமுறைக கல்யாணத்தைப் புரிஞ்சுக்கிட்டதால் தான் கமுக்கமா இருக்காய்ங்களோ என்னவோ?!
)) //
)))))))))))))))))
வாத்தியார் பேச்சுக்கு மறுபேச்சில்லை. இருக்கலாம்
உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.
Vaalha Vlamudan,
Thabotharan
Uppsala, Sweden.
ennoda best wishes um sollidunga muththunnaa
வாழ்த்துக்கள்
முத்துகுமரன்,
நண்பர் இளவஞ்சி முத்த தலைமுறையா?
இளைய தலைமுறையா?
கேட்டு சொல்லுங்க, அவரையும் பட்டியலில் சேர்த்திடலாம்
பரஞ்சோதி,
// நண்பர் இளவஞ்சி முத்த தலைமுறையா? //
எதேது… இது இளைய தலைமுறைய விட வெவகாரமால்ல இருக்கு!
))
உங்க ஆசைய கெடுப்பானேன் முத்த தலைமுறைலயே சேர்த்துடுங்க! ஹிஹி…
vazhuthukal manamakkalukku
muthukumar
vaazhthukkaL enrenrum