muthukumaran எழுதியவை | செப்டம்பர் 3, 2007

அப்பா, அட்லஸ் சைக்கிள், நான்

இளவஞ்சி <a href=http://ilavanji.blogspot.com/2007/07/blog-post_04.html>என்பீல்ட் புல்லட்</a> பதிவை எழுதிய போது எழுத நினைத்த பதிவு இது. வழக்கம் போல மிக காலத்தாமதமாக இன்று எழுது நேரம் அமைந்திருக்கிறது. பழைய நினைவுகளை அசைபோடுதல் என்பது எப்போது மனதிற்கு இதமாகவும், ஒரு உற்சாகத்தையும் தரக்கூடியது. இதோ என் பங்கிற்கு

<strong>அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்.</strong>.

<strong>அப்பா பற்றி கொஞ்சம்,</strong>

அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அப்பா. மருந்தாளுநர் சங்கத்தில் மாநில அளவில் முண்ணனித் தோழராக பணியாற்றியவர். சங்கத்தின் மாவட்டத்தலைவராக தொடர்ந்து இருந்தவர். அவர்களுடைய சங்கத்தில் தொடர்ந்து 90 விழுக்காடுகளுக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஒரே நபர். கம்யூனிசவாதி.
இறை நம்பிக்கை உடையவர்.  இயல்பாக எளிமையாக பழகக்கூடிய மனிதர்.

அப்பாவின் பலகூறுகளை நான் உள்வாங்கி இருக்கிறேன். அப்பாவுடன் பணிபுரிந்த பலர் என்னை அப்பாவின் நகல் என்று கூறுவார்கள். கொஞ்சமே கண்டிப்பைக் காட்டி ஒரு தோழனாகவே இருப்பவர் இன்று வரை.  அறிவுரைகளாக சொல்லாமல் வாழ்ந்து காட்டுபவர். எதிலும் எங்கும் நேர்மையோடு இருக்க வேண்டும், வெளிப்படையாக பேசுதல் வேண்டும், உண்மை என்று மனதிற்கு பட்டதை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும், மனித நேயத்தோடும், சமூக அக்கறையோடும் வாழ்தல் வேண்டும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர் அதன்படியே இருப்பவரும் கூட.

அப்பாவை பற்றி நிறைய எழுத இருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அவரது எழுத்து நடையிலே அவருடைய பணிகளை, அனுபவங்களை பதிவு செய்யுங்கள் என்று பலமுறை வற்புறுத்தி வருகிறேன். கையெழுத்துப் பிரதியாகவோ அல்லது இணையத்திலோ எழுதுங்கள் என்று சொல்லி வருகிறேன்.  பிறதொரு சமயத்தில் எழுதுகிறேன் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார்.

இப்போ <strong>அட்லாஸ் சைக்கிளுக்கு</strong> வருவோம்.

என்னுடைய முதல் சொத்து இந்த சைக்கிள் என்பேன்.ஏறக்குறைய 12 வருடங்களுக்கு முன் எனக்கு கிடைத்த சொத்து. பத்தாம் வகுப்பு படித்த போது கிடைத்தது.  நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது மிகத் தாமதமாகத்தான். ஏழாம் வகுப்பு படிக்கும் போதுதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அப்போது அப்பா BSA சைக்கிள்  பெரிய வண்டி வைத்திருந்தார். அந்த வண்டி இப்போது எங்களிடம் இல்லை. பழுதடைந்துவிட்டதால் சைக்கிள் கடைக்காரனிடமே கொடுத்து விட்டோம். அதன் மாதிரி
<a href=”http://bp3.blogger.com/_bPuRR82xi90/RtPqlWLRQsI/AAAAAAAAAEg/hkqg0r4ygEs/s1600-h/BSA-Deluxe-big.jpg”><img style=”display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;” src=”http://bp3.blogger.com/_bPuRR82xi90/RtPqlWLRQsI/AAAAAAAAAEg/hkqg0r4ygEs/s400/BSA-Deluxe-big.jpg” border=”0″ alt=”"id=”BLOGGER_PHOTO_ID_5103680730069811906″ /></a>

அப்பாவின் வண்டியெடுத்து ஓட்டத் தொடங்கிவிட்டாலும் உயரம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும் ஒருமுறை கூட வாய்திறந்து எனக்கு புது வண்டி வாங்கித் தாங்க என்று கேட்டதில்லை. இப்போதும் கூட இது வேண்டும் என்று எதையும் கேட்க மாட்டேன்.
பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள், வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். காலை அலுவலகப்பணியை முடித்துவிட்டு நேராக கடைக்குச் சென்று புதுவண்டியை வாங்கிக் கொண்டு,  நான்தான் முதன் முதலில் ஓட்ட வேண்டும் என்று திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்கு உருட்டிக் கொண்டே வந்திருக்கிறார். பாவம் அப்பாவின் நண்பர் புகழேந்தி மாமாவும் கூடவே நடந்து வந்திருக்கிறார். 

அப்போது என் வயதை ஒத்தவர்களுடைய பெரும்பகுதி தேர்வு BSA SLR  ஆக இருக்கும். ஆனால் அதை விட அட்லஸ் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால் அதை வாங்கி வந்தார். புதுவண்டி, நல்ல சிவப்பு நிறம் என ராஜா போல இருந்தது. நான் பள்ளியிலிருந்து வர அப்பா வாசலிலே காத்துக் கொண்டிருந்தார். நான் வரும் போதே பார்த்துவிட்டேன். புது வண்டி நிற்கிறதே யாருடையாதாக இருக்கும் என்று. ஏனெனில் அது எட்டு குடும்பங்கள் தங்கியிருந்த ஸ்டோர் வீடு. அதிகம் சபலப்படாமால், நமக்கேற்ற உயரத்தில் வண்டி இருக்கிறதே என்று யேசித்தவாறே மாடியேறி வீட்டுக்குப் போனேன். சைக்கிள் நல்லா இருக்குதாடா என்றூ அப்பா கேட்க எனக்கு ஆனந்த அதிர்ச்சி. அட எனக்கா புது வண்டி என ஆர்வத்தில் சாவி தாங்கப்பா என்றேன். முதல்ல சாப்பிடு அப்புறம் ஓட்டலாம் என்று சொல்ல வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு திருவரங்கம் முழுவதும் ஒரு சுற்று சுற்றினேன்.

என்னுடைய வண்டி – இப்போதைய தோற்றம் : 
<a href=”http://bp3.blogger.com/_bPuRR82xi90/RtPvqWLRQtI/AAAAAAAAAEo/mG_uyiUNydU/s1600-h/ATLAS.JPG”><img style=”display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;” src=”http://bp3.blogger.com/_bPuRR82xi90/RtPvqWLRQtI/AAAAAAAAAEo/mG_uyiUNydU/s400/ATLAS.JPG” border=”0″ alt=”"id=”BLOGGER_PHOTO_ID_5103686313527296722″ /></a>

1995லிருந்து என்னோடு இருந்து வரும் சொத்து இதுவென்றே சொல்லுவேன். இந்த வண்டியில்தான் முதன் முதலில் டபுள்ஸ் அடிக்க கற்றுக் கொண்டேன். கற்றூக் கொண்டது முதல் அப்பாவை மருத்துவமனையில் காலையில் கொண்டு போய் விடுவது எனது அன்றாடபணியாகும். முதுகுத் தண்டுவட தேய்மானம் காரணமாக அப்பாவை அவ்வளவாக ஓட்ட விடுவது கிடையாது. பள்ளிக்கு அருகே வீடு என்பதால் பெரும்பாலும் பள்ளிக்கு கொண்டு செல்ல மாட்டேன். வீட்டுக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டு அப்பாவையும் கூப்பிட்டு வந்து விடுவேன். மதிய நேர பணியாக இருந்தால் அப்பாவை விட்டுவிட்டு சைக்கிளோடு பள்ளிக்கு வந்துவிடுவேன். அப்போது சக நண்பர்கள் தங்களுடைய வண்டிகளை வித விதமாக அலங்கரித்து வருவார்கள். நானும் அது போல ஆசைப்பட்டு வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு முன் மக்கார்டில் பச்சை வண்ணத்தில் என் பெயரை எழுதினேன். எழுதியது அசிங்கமாகத் தெரியவே அந்த பகுதி முழுவதையும் பச்சை வண்ணத்தால் நிரப்பிவிட்டேன். சிகப்பு வண்டியில் பச்சை மின்னியது. :-)

1997 ஆண்டு 12 ம் வகுப்பு முடித்து கல்லூரி போகவிருந்த சமயம்தான் என்னுடைய வண்டியோடும் அப்பாவோடும் மிக அதிக நேரம் செலவிட்டேன். 12வது வகுப்பு இறுதித் தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதால் பொறியியல் கிடைக்காது என்ற நிலை,  அப்பாவின் முன் இரண்டே வாய்ப்புகள். ஒன்று ஏதேனும் இளங்கலை பாடப்பிரிவில் சேர்த்துவிடுவது அல்லது பணம் செலவழித்து பொறியியல் படிக்க வைக்க வேண்டியது.நேர்மையான அரசு ஊழியராக இருந்துவிட்டபடியால் சேமிப்பு என்று பெரிய அளவில் கிடையாது. சங்கத்தில் ஈடுபாடுடன் இருந்ததால் ஏற்பட்ட அதிகப்படியான செலவுகளாலும் கையிருப்பு இல்லாத நிலை. ஆனால் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. சொந்தக்காரர்கள் பெரும்பாலனவர்கள் ”<strong>அகலக்கால்”</strong> வைக்கிற, உன் சத்துக்கு இதெல்லாம் முடிகிற காரியமா முத்து என அப்பாவிடம் என்று சொன்னபோதிலும் அப்பா உறுதியாக இருந்தார். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என. அம்மா தன்னிடமிருந்த நகைகளை கழட்டிக் கொடுத்து முதலில் இதை அடகு வைத்து பணம் கொண்டு வாருங்கள் மீதித் தொகைக்கு வேறெங்காவது கடன் வாங்குவோம் என்று. அம்மாவின் ஒத்துழைப்பு இருந்ததாலே அவரால் எங்களை படிக்க வைக்க முடிந்தது.

அப்போது ஆரம்பித்ததுதான் நான் துபாய் வரும் வரை கடன், கடனை அடைக்க கடன் என்று வாழ்க்கை ஓடியது. என்னை படிக்க வைக்க வட்டிக்கு கடன் வாங்க வேண்டும் என்று இருந்த போது அதற்காக அப்பா பட்ட அலைச்சல் எத்தனை எத்தனை. எனது ஒரே வேலை அப்பாவை சைக்கிளில் வைத்துக் கொண்டு அவர் சொல்லுமிடங்களுக்கெல்லாம் கூட்டிச் செல்வது. அதனாலேயே வீட்டின் நிதிநிலமை என்னவென்பதும், எவ்வளவு கடன் வாங்குகிறோம், யாரிடம் வாங்குகிறோம் என்பதும் எனக்கு தெரிந்தே இருந்தது.

இவ்வளவு தெரிந்தும் கல்லூரிக் காலத்தில் கொஞ்சம் அதிகப்படியாகவே செலவு செய்தேன். என் நிலை அறிந்தும், நான் செய்த அளவுக்கதிகமான செலவுகள். நான் இறுதி ஆண்டு வந்த போது தம்பியும் பொறியியல் படிப்புக்கு வந்து விட்டான். இன்னும் அதிகப்படியான சுமை அப்பாவிற்கு. அப்போதும் அப்பாவிற்கு உற்ற துணை அட்லாஸ் சைக்கிள்தான். மிக மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவார். உயரம் கம்மியான சைக்கிள் என்பதால் அவருக்கு அது வசதியாக இருந்தது.

அப்பா ஓய்வு பெறும் 20 தினங்களுக்கு முன் எனக்கு துபாயில் பணி கிடைத்தது. அப்பா அவரது பணி ஓய்வு நிகழ்ச்சியின் ஏற்புரையில் சொன்னது என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. <strong>”இந்த இருபது நாளாத்தான் நான் நிம்மதியா தூங்குறேன். எனக்கு கை கொடுக்க பையன் வந்துட்டான்” இனி கவலை இல்லை. நாம எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளை படிக்க வைக்கணும் கேட்டுகிறேன்னு சொல்லி நிறைவு செய்தார்</strong>. கண்கள் கலங்க நான் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னை தனியே அழைத்து அப்பாவுடன் உடன் பணியாற்றியவர் ஒருத்தர் சொன்னது மிகப்பெருமையாக இருந்தது. கூட வேலை பாக்குறவங்க பைக், ஸ்கூட்டர்னு வரும் போது நீங்க சைக்கிள்ல வர்றீங்களே சார்னு நாங்க கூட பலமுறை கேலி பண்ணி இருக்கோம். உனக்கு வேலை கிடத்த பின்பு <strong>அவர் சிரித்த முகத்தோடு அதே சைக்கிளில் வந்த போது உண்மையாவே கம்பீரமா இருந்தது </strong>தம்பி. அப்பாவை பார்த்துக்குங்க என்றார். சரி சார் என சொல்லி வந்தேன். அப்பாவின் ஓய்வுக்குப் பின் மதுரை வந்துவிட்டோம்.

சென்ற ஆண்டு நான் சொந்த வீடு வாங்கிய போதும் அப்பாவிற்கு உற்ற துணைவன் என் அட்லஸ் சைக்கிள்தான். வீடு வாங்குவது தொடர்பாக எல்லா இடத்திற்கும் இதே சைக்கிளில்தான் அலைந்தார்கள். அப்பாவின் விருப்படியே நல்ல வீடாகவும் அமைந்தது.  இதுவரை வெயிலிலும் மழையிலும் காய்ந்து கருவாடாக கிடந்த என் சைக்கிளுக்கும் யோகம் வந்தது.

ஆம் ! இப்போது அய்யாவிற்கு தனி அறை. வேறு எந்த வாகனும் இல்லாததால் அந்த அறையில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறார். நான் வாழ்வில் அதிகம் முறை தொலைத்தது எதுவென்றால் இந்த வண்டியின் சாவி தான். இன்று பூட்டப்படாமல் அறைக்குள் தனியாளாக இருக்கிறார்.

இந்த முறை ஊருக்குப் போன போதும் ஆசை தீர சைக்கிள் ஓட்டினேன். அடிக்கடி செயின் கழண்டு கொண்டாலும் அந்த கடக் கடக் சத்தம் ஒரு சந்தோசத்தை தருகிறது.

அப்பா அம்மா மணிவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அப்பாவை வைத்து டபுள்ஸ் அடித்து சென்றபோது சொல்லிக் கொண்டுவந்தேன். வீடு என் பேர்ல இருந்தாலும் அதுல எனக்கு பங்குதான் உண்டு. மொத்தமும் கிடையாது. அதுனால இன்னொரு வீடு வாங்குற வரைக்கும் எனக்கு இருக்கிற ஒரே சொத்து சைக்கிள்தான்பா என்றேன். சிரித்துக் கொண்டார்.

கொஞ்சம் நீளாமாகிப் போய்விட்டது பதிவு. ஏனோ இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று ஓரு ஆசை.

ஏன்!

தனிமையின் ஏக்கம்!!

பிறந்தநாளன்று கூட அப்பா அம்மாவின் அருகாமையில் இல்லாமல்

இவ்வளவு தொலைவிலிருக்கும் தனிமையின் ஏக்கம்………

muthukumaran எழுதியவை | ஜூலை 16, 2007

மதுரை வலைப்பதிவர் கூடல் – 29.07.2007

மதுரை வலைப்பதிவர் கூடல் – 29.07.2007.

சென்னை, கோவை, பெங்களூர், அமீரகம், அமெரிக்கா என பதிவர் சந்திப்புகளும், பதிவர் பட்டறைகளும் நடைபெற்று வருவது மகிழ்ச்சியான ஒன்று. வலைப்பதிவுகள் சரியான மாற்று ஊடகமாக வளர இது போன்ற ஒன்றுகூடல்களும் கூட்டு முயற்சிகளுமே துணை புரிகின்றன. அனைவரும் ஆகஸ்ட் 5 தேதி சென்னையில் நடக்கும் பதிவர் பட்டறையை பற்றி அறிந்திருப்பீர்கள். அதற்கு முன்பாக வருகிற 29ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பு ஒன்று தருமி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடக்கவிருக்கிறது. மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டை சேர்ந்த பதிவர்களை சந்தித்து உரையாட வாய்ப்பாக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அன்று மதுரை வரக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து வலைப்பதிவர்களையும் கட்டாயம் வாருங்கள் என் அன்புடன் அழைக்கிறேன்.

மதுரை வலைப்பதிவர் கூடல்

நாள்: 29.07.2007
நேரம்: மாலை 4மணி முதல் 7 மணி வரை
இடம் அமெரிக்கன் கல்லூரி, தமிழ்த்துறை அருகே உள்ள சிறிய கூடம்

அமெரிக்கென் கல்லூரி வரைபடம்.

1.அமெரிக்கன் கல்லூரி முகப்பு

முகப்பிலிருந்து நேராக வந்து வலது புறம் திரும்ப வேண்டும்

10. சந்திப்பு நடைபெறும் தமிழ்துறை கட்டிடம்

நிகழ்வில் கலந்து கொள்ளவிரும்பும் நண்பர்கள் நிகழ்ச்சி நிரல் குறித்தான ஆலோசனைகளையும் பதிவிலோ அல்லது தனிமடலிலோ தொடர்பு கொண்டால் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற ஏதுவாக இருக்கும்.

*
பி.கு: வேற ஒன்னும் இல்லை மக்கா வரும் 27ம்தேதி விடுமுறைக்கு ஊருக்கு வர்றேன்.

muthukumaran எழுதியவை | ஜூலை 11, 2007

சிவாஜி – விமர்சனம்

புகைப்படத்திற்கு நன்றி: www.sivaji-the-film.com

muthukumaran எழுதியவை | ஜூலை 5, 2007

”சிவாஜி”க்கு தோல் கொடுத்த பெண்

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த படம். சிவாஜி ரசிகர்களுக்காக.
Secret behind Rajini’s colour

If you have watched Sivaji..You have observed the fair complexion of Rajinikanth in the song Oru koodai Sunlight.Everyone thought it was make-up that made Superstar Rajinikanth look like a European in that song, but the secret is about a year of computer graphics.

“We used cutting edge grafting technology and it was Shankar’s brain child,” revealed the film’s cinematographer KV Anand. “For the first time grafting technology has been used for an Indian film which was made possible by a Chennai based company Indian Arts who had worked in Shankar’s earlier films,” he said. One of the dancers, Jacky, was chosen by Shankar and Rajini’s skin tone was matched with her’s. The six and a half minute song was shot in Spain.

“Each shot of Rajni’s in the song was once again shot with Jacky and was sent to Indian Arts. Since the lighting varies in indoor and outdoor, to match the skin tone, expressions, lip and body movements of the two was a challenging task,” explained Anand. A total of 6700 frames were been for post production. Rajinikanth himself was amazed after watching the song.








சிவாஜி பற்றிய என்னுடைய விமர்சனம் கொஞ்ச நாளைக்கு பிறகு வரும் :-)

muthukumaran எழுதியவை | ஜூலை 2, 2007

முகம் மறைத்து

சிலவற்றில் அதீத வெளிச்சத்துடன்
சிலவற்றில் மங்கலாக
அடர்த்தியான
கருப்பு வெள்ளை நிழற்படமாக
வரையத் தொடங்கிய கோடுகளாக
ஓவியமாக
அறையெங்கும் நிறைந்துகிடக்கிறது
பிம்பங்கள்
எதில் நீயாக இருக்கிறாய் என
தேடிய பொழுதில்
உன் முகம் மறைத்துப் பறந்தது
காற்றில் ஒரு
வெள்ளைத் தாள்

muthukumaran எழுதியவை | ஜூன் 12, 2007

நதிநீர் இணைப்பு எனும் ஏமாற்று வேலை

தேர்தல் அரசியலின், அரசியல்வாதிகளின் அடிப்படைத் தத்துவம் மக்கள் அல்லலுறும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாது அதை நீர்க்கச் செய்தலே! அலாவுதீன் விளக்கிலிருந்து புறப்பட்டு வரும் பூதம் போல அவ்வப்போது வரும் ஒரு குரல் தேசிய நதிநீர் இணைப்பு. கேட்பதற்கு தேன் போன்று இனித்தாலும் ஆண் குழந்தை பெறுவது எப்படி சாத்தியமற்றதோ அதேபோலத்தான் இந்த நதிநீர் இணைப்பும். இந்தியா என்று ஒரு குடையின் கீழ் வாழ்ந்தாலும் முரண்களால் சூழப்பட்ட பல்வேறு இனக்குழுக்களின் கூட்டுத் தொகுப்பு என்பது நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் அப்பட்டமாக தெரிகிறது.

இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் தங்கள் மாநிலத்திற்கு ஆபத்து என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கேரளமும், பாலாற்றில் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரமும் இயற்கையின் கொடையை பகிர்ந்தளிக்க மறுக்கும் போது ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து நதிநீர் இணைப்பு முயற்ச்சி என்பது விழலுக்கு இறைத்த நீராகவே முடியும். இந்தியாவின் தேசிய நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டாலும் அது தண்ணீர் பிரச்சனையால் அவதிப்படும் மாநிலங்களுக்கு எந்த வித தீர்வையும் தந்துவிடாது.
கனவுகள் பலசமயம் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் அவை ஒரு போதும் நடைமுறைக்கு வந்துவிடாது. கனவு கண்டு கொண்டே இருக்கும் கோவணத்தையும் உருவும் வித்தைதான் அரசியல்வாதிகள் நடத்துவது.

நம்மிடையே இருக்கும் நீராதங்களை அழிக்கும் மணற்கொள்ளைகளைத் தடுக்காமலும், நீரினை முறையாக சேமிக்கும் திட்டங்களை செயல்முறைப் படுத்தாமலும், நீர் ஆதாரங்களை அந்நிய வணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்து மக்களை வஞ்சிக்கும் அரசியல், அதிகார பொருளாதார நிலைப்பாடுகள் மாறாத வரை எந்தத் தீர்வும் ஏற்பட்டுவிடாது. பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வு காண எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏமாற்று வேலையாக நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது அந்த பிரச்சனையை நீர்க்க செய்யும் வழிமுறையே ஆகும். நதிகள் இணைக்கப்பட்டாலும் அவை முறையாக பகிர்ந்தளிக்கபடுவதற்கான எந்த எதார்த்தமான சாத்தியதைகள் இல்லை என்பதே கண்கூடு. ஒவ்வொரு மாநிலங்களின் பிராந்திய நலன்கள் இந்த நதிநீர் இணைப்புக்கு மிகமுக்கிய இடையூறாக இருக்கிறது. இன்றைய சூழலில் வலுவான பிராந்தியங்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு மத்தியில் அரசியல் நடக்கக்கூடிய சூழல் இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான முரண்களை, வெறுப்புணர்வுகளை களைந்து அவர்களை சமநிலையில் அமர வைக்கும் யோக்கியதையோ, விருப்பமோ, பொறுப்புணர்வோ மத்தியில் ஆளும் எந்த அரசாங்கத்திற்கும் கிடையாது. அவரவரக்கு வரப்போகின்ற தேர்தல் சார்ந்த லாப நட்ட கணக்குகள்தான் இருக்கின்றதே தவிர மக்கள் நலன் என்பது எள்ளளவும் கிடையாது.

நதிநீர் இணைப்பு என்பது முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்தியா என்னும் ஒரு நாடு பல்வேறு நாடுகளாக பிரிந்து போகும் சூழலையே உருவாக்கும். அது இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்கு புரியும். அதனால்தான் நதிநீர் இணைப்பு எனும் கானல் நீரின் மீது அவர்கள் அரசியல் கப்பலை தெளிவாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்,

**
விடைபெறும் முன்

அதிகரித்துவிட்ட பணிச்சூழலினால் பதிவுலகில் இயங்குவது மிகவும் குறைந்து போயிற்று. பதிவுகள் எழுதாவிடினும் தொடர்ச்சியான வாசிப்பாவது இருந்தது இப்போது அதுவும் குறைந்துவிட்டது. குறுவிடுப்பாக இந்தவார இறுதியில் சொந்த ஊருக்கு செல்வதால் அந்த அழுத்தங்களும் வேறு. அது பற்றிய விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்

தனது ஆகாயத்திற்கு அடுத்த வீடு கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் புதுக்கவிதையின் முன்னோடியான திரு.மு.மேத்தா அவர்களுக்கு அமீரகக் தமிழ்க்கவிஞர்கள் பேரவையின் சார்பாக பாராட்டு விழா வருகின்ற வெள்ளி(15.06.2007) மாலை 6 மணி அளவில் இந்திய தூதரக அரங்கில் நடைபெற இருக்கிறது. அமீரகத்தில் வசிக்கும் நண்பர்கள் அனவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அழைப்பிதழ்:

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை
தனித்தன்மையோடு நடத்தவிருக்கும்
கவிதைத்திருவிழா
ஜூன் 15 ஆம் நாள் , துபாய் இந்திய தூதரக அரங்கில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில்

சாகித்ய அகாதெமி
விருது பெற்ற

புதுக்கவிதையின் தாத்தா
மு.மேத்தா

முனைவர்- கவிஞர்
சேது குமணன்

எழுத்தாளர், இன உணர்வாளர்
சு. குமணராசன்

பேராசிரியர், ஆய்வாளர்
கம்பம் சாகுல் அமீது

உள்ளிட்ட சான்றோர்களும்
தமிழ், கவிதை ஆர்வலர்களும்
கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

அனைத்து நண்பகளும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்

மேலும் விவரங்கள் அறிய
இசாக் 050 4804113, கவிமதி 050 5823764, சேர பட்டணம் மணி 050 7763653

மின்னஞ்சல் thuvakku@gmail.com

muthukumaran எழுதியவை | மே 31, 2007

காய்ச்சல்

இனிக்கவில்லை
நேற்று வந்த காய்ச்சல்!
அருகில்
நீ இல்லாது போனதால்.

muthukumaran எழுதியவை | மே 6, 2007

மணமாலையும் மஞ்சளும் சூட…

இன்று எனது உயிர்நண்பன் M. பாலாஜி க்குத் திருமணம். கல்லூரியில் இரட்டையர்கள் என்றழைக்கப்படும் அளவிற்கு நாங்கள் நெருக்கம். ஒரே அறையில்லாவிட்டாலும் அறைநண்பன். கல்லூரி சேர்ந்த போது இவனது ஊரை அறிந்து கொண்டு நிச்சயம் இவனை நண்பனாக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்( ஏன் என்பது இப்போது அவ்வளவு முக்கியம்ற்றது. சிரித்துகொள்ள மட்டும் நினைத்துக்கொள்வேன்). ஆனால் இயல்பாகவே நண்பர்களாகிவிட்டோம். என் மனமறிந்த உற்ற நண்பன். இயல்பான இனிமையான சோம்பேறி அவன். அவன் திருமண பத்திரிக்கை கூட நான் தொலைபேசி வாங்கினேன். அதுவும் சென்ற வாரத்தில்தான் :-) .

தொலைபேசியில் அழைத்து மண்டகப்படி அர்ச்சனை செய்ய போதும்டா விடுடா என்றான். ஒழுங்கா 5 நிமிடம் திட்டு வாங்கிக் கொள் என்று சொல்ல பொறுமையாக கேட்டுக் கொண்டு திட்டி முடித்தவுடன் இரு கான்பிரன்ஸில் போடுறேன் அவங்ககிட்ட பேசு என்றான். அதான் என் பாலாஜி. இணைப்பு கிடைத்ததும் முதல் வார்த்தை சொன்னேன் உனக்கு நான் இன்றையிலிருந்து அண்ணன்மா. எதுவும் சேட்டை செய்தான் என்றால் சொல் கவனித்துக் கொள்கிறேன் என்று. சரி அண்ணா என்று சொன்னதும் அன்றைய ஒரு மணி நேர உரையாடலில் ஆத்மார்த்தமாக அண்ணா என்று அழைத்ததும் மனதில் இனிமையாக நிற்கிறது. இனிமையான நட்பு இன்று உறவாக அடுத்த நிலைக்கு நகர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கம் போல் வெளிநாட்டு சம்பாத்தியத்தினால் இன்னொரு முறை ஏமாற்றம். நேரில் காண மிகவும் விரும்பிய திருமணம். மறுபடியும் அதே ஓரிரு மாத இடைவெளியினால் இழந்திருக்கிறேன்.

இன்று மணமாலை சூடிக் கொள்ளும் பாலாஜி-மல்லிகா
தம்பதியினருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

என்னோடு நீங்களும் வாழ்த்துங்களேன்



muthukumaran எழுதியவை | ஏப்ரல் 24, 2007

என்றும் தமிழ்மணத்தோடு…

***

சாக்கடை புழுக்களளால்
மனதமைத்துக் கொண்டு-

தமிழ் மலர்களால்
மணம் வீசும்
பூங்காவின் வசந்தம் தாளாது
தேசபக்த ஓலமிடுகின்றன

குரூர அழுகல் சிந்தையோடு
திண்ணையில் வளர்க்கப்படும்
திருவாளர் நாய்கள்.

**

பழைய பதிவுகள் »

வகைகள்